2019 உலக கிண்ணம் வரை டோனி விளையாட வேண்டும்

இங்கிலாந்தில் உலக கிண்ண கிரிக்கெட் போட்டிகள் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளன. இதற்காக அனைத்து நாட்டு அணிகளும் தயாராகி வருகின்ற்ன போட்டியை நடத்தும் இங்கிலாந்து அணி அங்கு தொடர்ந்து 8 தொடர்களை கைப்பற்றியுள்ளது. 

இந்நிலையில், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள உலக கிண்ண போட்டிகள் வரை மகேந்திர சிங் டோனி இந்திய் அணியில் விளையாட வேண்டும் என முன்னாள் வீரர் சேவாக தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக, இந்திய அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் வீரேந்திர சேவாக் ரிவி பேட்டி ஒன்றில் கூறுகையில், இங்கிலாந்தில் சமீபத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட விக்கெட் காப்பாளர் ரிஷப் பந்த் அணியில் இடம் பிடித்து அறிமுக டெஸ்டில் சதமடித்துள்ளார். 

தற்போது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ள ரிஷப் பந்த், உலகக் கிண்ண போட்டிக்கு முன் 15 அல்லது 16 போட்டிகளில் விளையாட உள்ளார். 

அவரை விட டோனிக்கு இங்கிலாந்து மண்ணில் விளையாடிய அனுபவம் உண்டு. அடுத்த ஆண்டு நடக்கவுள்ள உலக கிண்ண தொடரில் இந்தியா கிண்ண வெல்ல டோனி நிச்சயம் பங்களிப்பார். எனவே அதுவரை டோனி கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து விளையாட வேண்டும். இது எனது சொந்த கருத்து மட்டுமே என தெரிவித்தார்.
2019 உலக கிண்ணம் வரை டோனி விளையாட வேண்டும் 2019 உலக கிண்ணம் வரை டோனி விளையாட வேண்டும் Reviewed by Vanni Express News on 9/14/2018 05:33:00 PM Rating: 5