நன்னடத்தை விதியை மீறிய ரஷித் கானுக்கு அபராதம்

ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் நேற்று முன்தினம் நடந்த போட்டியில் பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. 

இந்தப் போட்டியில் நடத்தை விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக ஆப்கானிஸ்தான் தலைவர் அஸ்கர், சுழற்பந்து வீரர் ரஷித் கான், பாகிஸ்தான் ஆல்ரவுண்டர் ஹசன் அலி ஆகியோருக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) அபராதம் விதித்துள்ளது. 

பாகிஸ்தான் வீரர் ஆசிப் அலி ஆட்டம் இழந்து செல்லும்போது ரஷித் கான் அவரை நோக்கி சர்ச்சைக்குரிய வகையில் சைகை காண்பித்தார். 

ஆப்கானிஸ்தான் தலைவர் அஸ்கர் பாகிஸ்தான் வீரர் ஹசன் அலியை வேண்டும் என்றே தோளோடு தோள் உரசி சென்றார். பாகிஸ்தான் வீரர் ஹசன் அலி ஆப்கானிஸ்தான் துடுப்பட்ட வீரர் ஹஸ்மத் துல்லாவை நோக்கி பந்தை எறிவது போன்று சைகை செய்தார். 

இவை ஐசிசி நடத்தை விதிகளை மீறிய செயலாகும். இதைத் தொடர்ந்து அவர்களுக்கு போட்டி ஊதியத்தில் இருந்து 15 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டது.
நன்னடத்தை விதியை மீறிய ரஷித் கானுக்கு அபராதம் நன்னடத்தை விதியை மீறிய ரஷித் கானுக்கு அபராதம் Reviewed by Vanni Express News on 9/23/2018 11:28:00 PM Rating: 5