குகையொன்றிற்குள் இருந்து இரண்டு இளைஞர்களின் சடலங்கள் மீட்பு

-க.கிஷாந்தன்

நுவரெலியா - ராகல பகுதியிலுள்ள குகையொன்றிற்குள் இருந்து இரண்டு இளைஞர்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த சடலங்கள் இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டவர்கள் ராகல - சென்லேனாட்ஸ் பகுதியை சேர்ந்தவர்கள் எனவும், 31 வயதான செல்லையா அசோக் குமார் மற்றும் 29 வயதான மகேஷ்வரன் ரத்னேஷ்வரன் ஆகியோரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இருவரும் மிருகங்களை வேட்டையாடுவதற்காக 15.09.2018 அன்றைய தினம் சென்றிந்த நிலையில், அவர்கள் காணாமல் போயிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு உயிரிழந்தவர்களுடன் சென்ற நாயின் உடலும் குகைக்குள் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த இரண்டு இளைஞர்கள் மிருகமொன்றை வேட்டையாடுவதற்காக குகைக்குள் புகை பிடித்துள்ளதுடன், அதனைத் தொடர்ந்து இருவரும் குகைக்குள் சென்றுள்ளமையும் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இராகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
குகையொன்றிற்குள் இருந்து இரண்டு இளைஞர்களின் சடலங்கள் மீட்பு குகையொன்றிற்குள் இருந்து இரண்டு இளைஞர்களின் சடலங்கள் மீட்பு Reviewed by Vanni Express News on 9/16/2018 10:56:00 PM Rating: 5