கர்ப்பிணி பெண் விரிவுரையாளர் சடலமாக மீட்பு - சோக சம்பவம்

கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தின் பெண் விரிவுரையாளர் ஒருவர் திருகோணமலை நகர கடலில் இருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் கூறியுள்ளார். 

நேற்று மதியம் கடமைகளை முடித்து விட்டு பல்கலைக்கழகத்தில் இருந்து வீடு சென்ற அவர் பிற்பகல் 2.30 மணியளவில் இருந்து காணாமல் போயுள்ளார். 

இந்நிலையில் இன்று காலை அவரது பாதணிகள் திருகோணமலை கடற்கரையிலிருந்து கண்டெடுக்கப்பட்ட நிலையில், இன்று பகல் சடலம் கடற்கரையில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. 

வவுனியா, ஆசிக்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடைய கர்ப்பிணி பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

குறித்த பெண் விரிவுரையாளரின் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகவும், உயிரிழப்புக்கான காரணம் இதுவரை தெரியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எவ்வாறாயினும் நேற்று மதியம் தனது கணவனுக்கு தொலைபேசி மூலம் அழைத்து திருகோணமலைக்கு வருமாறு உயிரிழந்த பெண் கூறியுள்ளதாக கணவன் தெரிவித்துள்ளார்.
கர்ப்பிணி பெண் விரிவுரையாளர் சடலமாக மீட்பு - சோக சம்பவம் கர்ப்பிணி பெண் விரிவுரையாளர் சடலமாக மீட்பு - சோக சம்பவம் Reviewed by Vanni Express News on 9/21/2018 10:46:00 PM Rating: 5