ஆர்ப்பாட்டத்தில் உயிரிழந்தவரின் இறுதிக் கிரியை இன்று

-சதீஸ்குமார்

கூட்டு எதிர்க்கட்சியால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது உயிரிழந்த ஜகத் விமலசூரியவின் இறுதிக் கிரியைகள் இன்று இடம்பெற்றது. 

கடந்த 05ம் திகதி நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் இடம்பெற்ற ஆர்பாட்டத்தின் போது ஹட்டன் குடாகம பகுதியை சேர்ந்த 39 வயதான ஜகத் விமலசூரிய என்பவரே உயிரிழந்தார். 

இவரின் பூதவூடலுக்கு நேற்று வெள்ளிகிழமை இரவு வருகை தந்த கூட்டு எதிர்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.பி.ரத்நாயக்க, குமாரவெல்கம, நாமல்ராஜபக்ஷ ஆகியோர் ஹட்டன் குடாகம பகுதிக்கு சென்று உயிர் இழந்த ஜகத் விமலசூரியவின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தினர். 

இந்த ஆர்பாட்டத்தில் உயிரிழந்த ஜகத் விமலசூரிய என்பவர் ஹட்டன் கொழும்பு தனியார் பேரூந்தின் நடத்துனர் என்பதுடன்,, கொழும்பில் நடைபெற்ற பேரணிக்கு தனது நண்பர்களுடன் வருகை தந்துள்ளார். 

மாளிகாவத்தை வரை பேரூந்தில் வந்தவர் பேருந்தில் இருந்து இறங்கி நண்பர்களுடன் லேக் ஹவுஸ் சுற்றுவட்டம் வரை நடந்து சென்றுள்ளார். 

இதன்போது அவர் தனக்கு உடல்நல குறைவு ஏற்பட்ட நிலையில் மீண்டும் பேரூந்திற்கு செல்வதாக நண்பர்களிடம் கூறி விட்டு சென்றுள்ளார். 

மாலை 6.15 மணியளவில் மீண்டும் பேரூந்தில் நண்பர்கள் சோதனையிடும் போது குறித்த நபர் பேரூந்து ஆசனத்தில் உயிரிழந்த நிலையில் காணப்பட்டமை குறிப்பிடதக்கது.  கூட்டு எதிர்க்கட்சியின் ஆர்ப்பாட்டத்தில் உயிரிழந்தவரின் இறுதிக் கிரியை இன்று
ஆர்ப்பாட்டத்தில் உயிரிழந்தவரின் இறுதிக் கிரியை இன்று ஆர்ப்பாட்டத்தில் உயிரிழந்தவரின் இறுதிக் கிரியை இன்று Reviewed by Vanni Express News on 9/08/2018 10:04:00 PM Rating: 5