ஆற்று நீரில் சிக்கிய மான் குட்டியை காப்பாற்றிய பிரதேசவாசிகள்

நாவலப்பிட்டி வில்டன் தோட்டம் பிரதேசத்தின் மலை உச்சியில் இருந்து மகாவலி கங்கையை நோக்கி வரும் கிளை ஆற்றில் அடித்து வரப்பட்ட மான் குட்டியொன்று பிரதேசவாசிகளால் காப்பாற்றப்பட்டுள்ளது.

நேற்று பிற்பகல் பெய்த கடும் மழையுடன் குறித்த மான் குட்டி ஆற்று நீரில் சிக்கி இவ்வாறு அடித்து வரப்பட்டதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.

இதில் குறித்த மான்குட்டியின் வலது கண்ணில் காயம் ஏற்பட்டுள்ளாக குறிப்பிடப்பட்டுள்ளது.

காப்பாற்றப்பட்ட மான் குட்டி நல்லத்தண்ணி வனவிலங்கு அலுவலக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஆற்று நீரில் சிக்கிய மான் குட்டியை காப்பாற்றிய பிரதேசவாசிகள் ஆற்று நீரில் சிக்கிய மான் குட்டியை காப்பாற்றிய பிரதேசவாசிகள் Reviewed by Vanni Express News on 9/27/2018 11:02:00 PM Rating: 5