இன்று காலை திருகோணமலையில் நிலநடுக்கம் - பதற்றத்தில் மக்கள்

திருகோணமலை பிரதேசத்தில் இன்று காலை சிறிய அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. 

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 3.5 இற்கும் 3.8 இற்கும் இடைப்பட்டதாக பதிவாகியுள்ளது என்று புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தின் பணிப்பாளர் சந்திரவிமல் சிறிவர்தன கூறினார். 

இன்று சனிக்கிழமை (15) அதிகாலை 12.35 இந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

எனினும் , இந்த நில நடுக்கத்தால் பொதுமக்களுக்கோ, சொத்துக்களுக்கோ எந்தவித சேதங்களும் ஏற்படவில்லை என சந்திரவிமல் சிறிவர்தன கூறினார்.
இன்று காலை திருகோணமலையில் நிலநடுக்கம் - பதற்றத்தில் மக்கள் இன்று காலை திருகோணமலையில் நிலநடுக்கம் - பதற்றத்தில் மக்கள் Reviewed by Vanni Express News on 9/15/2018 03:05:00 PM Rating: 5