முஸ்லிம் ஒருவரின் வர்த்தக நிலையத்தில் தீ - கொய்யாவாடி சந்தியில் சம்பவம்

-வன்னி எக்ஸ்பிரஸ் நியூஸ் செய்தியாளர்

புத்தளம் நுரைச்சோலை கொய்யாவாடி சந்தியில் அமைந்துள்ள பிரபல வர்த்தக நிலையம் ஒன்றின் நேற்று மாலை 05.20 மணியளவில் தீப்பரவியுள்ளது.

தீயினால் வர்த்தக நிலையம் முழுமையாக எரிந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். 

பல இலச்சம் பெறுமதியான பொருட்களும் வர்த்தக நிலையத்துடன் எரித்துள்ளது.

நுரைச்சோலை மின்சாரசபை தீப்பரவிய இடத்துக்கு உடனடியாக விரைந்து வர்த்தக நிலையத்தின் மின்சாரத்தை துண்டித்து இருந்தது.

தீப்பரவலையடுத்து நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் இருந்து  தீயணைப்பு பிரிவினர் அங்கு சென்று தீயினை முழுமையாக கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளனர். 

தீப்பரவலுக்கான காரணம் இதுவரை தெரியவில்லை என்பதுடன், நுரைச்சோலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

தீப்பரவிய வர்த்தக நிலையம் முஸ்லிம் ஒருவரின் என்பது குறிப்பிடத்தக்கது. 

யா அல்லாஹ் இவரின் மனதை நிலைகுலைய விடாமல் இவரின் தொழிலில் மேலும்மேலும் வளந்து வர பறக்கத் செய்வாயாக. ஆமீன்
முஸ்லிம் ஒருவரின் வர்த்தக நிலையத்தில் தீ - கொய்யாவாடி சந்தியில் சம்பவம் முஸ்லிம் ஒருவரின் வர்த்தக நிலையத்தில் தீ - கொய்யாவாடி சந்தியில் சம்பவம் Reviewed by Vanni Express News on 9/13/2018 11:18:00 AM Rating: 5