இன்று காலை கொழும்பில் இரண்டு மாடி வீட்டில் தீ

கொழும்பு - 02, பார்க் வீதி பிரதேசத்தில் உள்ள இரண்டு மாடி வீடொன்றில் இன்று காலை தீப்பரவியுள்ளது. 

இந்த தீயினால் வீட்டின் மேல் மாடி முழுமையாக தீயில் எரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இன்று காலை 06.00 மணியளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

தீப்பரவலையடுத்து கொழும்பு தீயணைப்பு பிரிவினர் அங்கு சென்று தீயினை முழுமையாக கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளனர். 

தீப்பரவலுக்கான காரணம் இதுவரை தெரியவில்லை என்பதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இன்று காலை கொழும்பில் இரண்டு மாடி வீட்டில் தீ இன்று காலை கொழும்பில் இரண்டு மாடி வீட்டில் தீ Reviewed by Vanni Express News on 9/13/2018 03:33:00 PM Rating: 5