விஷேட விமானம் மூலம் அவுஸ்திரேலியாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த இலங்கையர்கள் அனுப்பப்பட்டார்கள்

சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவில் தங்கியிருந்த 09 இலங்கையர்கள் அந்த நாட்டில் இருந்து இன்று காலை இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். 

இவர்கள் யாழ்ப்பாணம், வவுனியா உட்பட வடக்கு கிழக்கு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது. 

இவர்கள் அனைவரும் அவுஸ்திரேலியாவுக்குச் சொந்தமான விஷேட விமானம் மூலம் இன்று காலை 08.00 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். 

இவர்களுடன் அந்த நாட்டின் பாதுகாப்பு அதிகாரிகள் பலரும் அந்த விமானத்தில் வந்துள்ளனர். 

விமான நிலைய குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளிடம் இவர்கள் ஒப்படைக்கப்பட்டதையடுத்து, அந்த அதிகாரிகள் இவர்களை விமான நிலையக் குற்றப்புனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
விஷேட விமானம் மூலம் அவுஸ்திரேலியாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த இலங்கையர்கள் அனுப்பப்பட்டார்கள் விஷேட விமானம் மூலம் அவுஸ்திரேலியாவில் சட்டவிரோதமாக  தங்கியிருந்த இலங்கையர்கள் அனுப்பப்பட்டார்கள் Reviewed by Vanni Express News on 9/11/2018 11:08:00 PM Rating: 5