எரிபொருள் எடுத்துச் செல்லும் குழாயில் கசிவு - திருத்தம் செய்வதற்கு 3 நாட்கள் செல்லும்

வத்தள, உஸ்வெடகெய்யாவ கடற்கரை பகுதியில் நேற்று காலை முதல் எண்ணை படிவுகள் பாரிய அளவில் மிதந்து கொண்டிருப்பதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றனர். 

எரிபொருள் கப்பலில் இருந்து முத்துராஜவெல முனையத்திற்கு எரிபொருள் எடுத்துச் செல்லும் குழாய் ஒன்றில் கசிவு ஏற்பட்டுள்ள காரணத்தால் தான் இவ்வாறு எண்ணை படிவுகள் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. 

நேற்று (08) காலை குறித்த குழாயில் கசிவு ஏற்பட்டுள்ளமை தொடர்பில் தெரியவந்துள்ளதுடன் அதனை திருத்தம் செய்வதற்கு 3 நாட்கள் செல்லும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் தம்மிக ரணதுங்க தெரிவித்துள்ளார் 

குறித்த திருத்த வேலை காரணமாக எவ்வித எரிபொருள் தட்டுப்பாடுகளும் ஏற்படாது எனவும் சூழல் பாதிப்புக்களை குறைத்து கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

சுமார் 25 டொன் எரிபொருள் இவ்வாறு கசிவடைந்துள்ளதாக கடல்சார் சுற்றுச்சூழல் ஆணையத்தின் தலைவர் ரியல் அத்மிரல் ரோஹன பெரேரா தெரிவித்துள்ளார்.
எரிபொருள் எடுத்துச் செல்லும் குழாயில் கசிவு - திருத்தம் செய்வதற்கு 3 நாட்கள் செல்லும் எரிபொருள் எடுத்துச் செல்லும் குழாயில் கசிவு - திருத்தம் செய்வதற்கு 3 நாட்கள் செல்லும் Reviewed by Vanni Express News on 9/09/2018 03:18:00 PM Rating: 5