பல படிப்பினைகளை வழங்க முடியாது போனது - கோட்டாபய ராஜபக்ஷ

யுத்தம் தொடர்பாக சர்வதேசத்திற்கு கொண்டு செல்லப்பட்ட தவறான பிரச்சாரங்கள் காரணமாக, யுத்தத்திற்கு பின்னரான காலத்தில் நாட்டின் பாதுகாப்பு தரப்பினர் செய்த வேலைகள் சம்பந்தமாக சர்வதேசத்திற்கு படிப்பினைகளை கற்றுக் கொள்ள இருந்த சந்தர்ப்பம் இல்லாது போனதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ கூறியுள்ளார். 

கொழும்பில் இடம்பெற்ற ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவால் எழுதப்பட்ட நூல் வௌியீட்டு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார். 

இந்நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதம அதிதியாக கலந்து கொண்டிருந்தார். 

இந்த நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாத யுத்தம் சம்பந்தமாக தவறான கருத்து சர்வதேசத்திற்கு கொண்டு செல்லப்பட்டிருந்ததால், துரதிஷ்டவசமாக சர்வதேசத்திற்கு வழங்க முடியுமான பல படிப்பினைகளை வழங்க முடியாது போனதாக அவர் கூறியுள்ளார். 

யுத்தத்தின் பின்னரான காலத்தில் புனர்வாழ்வளித்தல், மிதிவெடி அகற்றல் மற்றும் வடக்கின் அபிவிருத்தி போன்றவற்றில் நாட்டின் இராணுவத்தினர் பாரிய பங்களிப்பு வழங்கியிருந்ததாக கோட்டாபய ராஜபக்ஷ கூறியுள்ளார்.
பல படிப்பினைகளை வழங்க முடியாது போனது - கோட்டாபய ராஜபக்ஷ பல படிப்பினைகளை வழங்க முடியாது போனது - கோட்டாபய ராஜபக்ஷ Reviewed by Vanni Express News on 9/07/2018 09:57:00 PM Rating: 5