களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலைக்கு மேலும் ஐம்பது லட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு

-பிரதி அமைச்சரின் ஊடகப் பிரிவு

களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலைக்கு ஏற்கனவே ஒதுக்கப்பட்ட 60 லட்சம் ரூபாவுக்கு மேலதிகமாக மேலும் 50 லட்சம் ரூபாவை சுகாதார பிரதி அமைச்சர் பைசல் காசீம் வழங்கியுள்ளார்.

தற்போது வழங்கப்பட்டுள்ள இந்த நிதி வைத்தியசாலையில் மருந்து களஞ்சியசாலை ஒன்றை நிர்மாணிப்பதற்காக பயன்படுத்தப்படும்.

ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ள 60 லட்சம் ரூபாவில் 50 லட்சம் ரூபா வைத்தியசாலையின் பாரிய திருத்த வேலைகளுக்கும் 10 லட்சம் ரூபா நீர் விநியோக மற்றும்  புனரமைப்பு வேலைகளுக்கும் செலவிடப்படவுள்ளது.

மொத்தமாக ஒரு கோடி 10 லட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையின் ஏனைய அபிவிருத்திப் பணிகளுக்கும் கட்டங்கட்டமாக நிதி உதவிகளை வழங்குவதற்கு பிரதி அமைச்சர் பைசல் காசீம் நடவடிக்கை எடுத்துள்ளார்.
களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலைக்கு மேலும் ஐம்பது லட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலைக்கு மேலும் ஐம்பது லட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு Reviewed by Vanni Express News on 9/06/2018 04:21:00 PM Rating: 5