இலங்கையில் மீண்டும் மரண தண்டனை வருத்தமான விடயம்

இலங்கையில் மீண்டும் மரண தண்டனையை அமுல்படுத்தும் திட்டம் சம்பந்தமாக தான் வருத்தமடைவதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் மிச்சல் பச்சேலட் (Michelle Bachelet) தெரிவித்துள்ளார். 

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 39வது கூட்டத்தொடர் சுவிஸ்சலாந்தின், ஜெனீவாவில் நேற்று (10) ஆரம்பமானது. 

அதில் உரை நிகழ்த்திய போதே ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் மிச்சல் பச்சேலட் இதனைத் தெரிவித்துள்ளார். 

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அலுவலகத்தை ஸ்தாபித்தல் மற்றும் அதன் செயற்பாடுகள் சம்பந்தமாக திருப்தியடைவதாக அவர் கூறியுள்ளார். 

இலங்கையின் நீண்ட கால ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கு அதிகாரிகள் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

அதேநேரம் இந்த மாநாட்டில் இலங்கை தொடர்பான இரண்டு அறிக்கைகளும் முன்வைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் மீண்டும் மரண தண்டனை வருத்தமான விடயம் இலங்கையில் மீண்டும் மரண தண்டனை வருத்தமான விடயம் Reviewed by Vanni Express News on 9/11/2018 03:10:00 PM Rating: 5