கிளிநொச்சியில் சட்டவிரோத மணல் அகழ்வு செய்யும் இடம் பொலிஸாரால் சுற்றி வளைப்பு

கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வு செய்யும் இடம் ஒன்று நேற்று (13) இரவு மாவட்ட விசேட பிரிவு பொறுப்பதிகாரி சத்துரங்க தலைமையிலான குழுவினர் சுற்றிவளைத்த பொழுது சட்டவிரோதமாக மண் ஏற்றிக்கொண்டிருந்த டிப்பர் வாகனம் ஒன்றும் உழவு இயந்திரம் ஒன்றும் பிடிக்கப்பட்டுள்ளது. 

சுமார் 400 கியூப் மணல் ஆற்றில் இருந்து ஏற்றப்பட்டு குறித்த உரிமையாளர்கள் இல்லாத காணிப் பகுதியில் சட்டவிரோத யாட் அமைத்து வெளிமாவட்டங்களுக்கு விற்பனை செய்து வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பில் விசேட பிரிவு பொறுப்பதிகாரி சத்துரங்க கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தமைக்கு அமைவாக குறித்த பகுதிக்கு விஜயம் செய்த கிளிநொச்சி நீதாவன் நீதிமன்றின் பதிவாளர் மற்றும் உத்தியோகத்தர்கள் நிலைமைகளை நேரில் பார்வையிட்டுள்ளனர். 
கிளிநொச்சியில் சட்டவிரோத மணல் அகழ்வு செய்யும் இடம் பொலிஸாரால் சுற்றி வளைப்பு கிளிநொச்சியில் சட்டவிரோத மணல் அகழ்வு செய்யும் இடம் பொலிஸாரால் சுற்றி வளைப்பு Reviewed by Vanni Express News on 9/14/2018 04:40:00 PM Rating: 5