சிவன் கோயில் விவகாரம் முப்பது வருட இழுபறியை காதர் மஸ்தான் தீர்த்து வைத்தார்

-ஊடகப்பிரிவு

புதுக்குடியிருப்பில் முப்பது ஆண்டு காலமாக நீடித்து வந்த மந்துவில் சிவன்  கோவில் மணற்குளம் பிரச்சனை பிரதி அமைச்சர் காதர் மஸ்தான் தலைமையில் தீர்த்துவைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்

கமநல சேவைகள் திணைக்களத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட குளமாக மந்துவில் பகுதியில் அமைந்துள்ள மணற்குளம் காணப்படுகின்றது 9.3 ஏக்கர் நிலப்பரப்பினை கொண்டகுளம்இதுவாகும்

இந்த குளத்தின் நீரினை நம்பி சுமாராக 24 ஏக்கர் வயல் செய்கை பண்ணப்பட்டு வந்தாலும் அவை இதுவரை கமநல சேவைகள் திணைக்களத்தின் கீழ் பதிவு செய்யப்படவில்லை எனவும் மானாவாரியாகவே  இந்த வயல் செய்கை மேற்க்கொள்ளப்பட்டு வந்துள்ளதாக கமநல சேவைகள் திணைக்கள உத்தியோகத்தர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இன்னிலையில் குளம் அமைந்துள்ள பகுதியில் சிவன் ஆலயம் ஒன்று நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக அமைக்கப்பட்டு வந்துள்ள போதும் விடுதலைப்புலிகள் காலத்தில் இருந்தே இந்த சிவன் ஆலய நிர்வாகத்திற்கும் குளத்தினை நம்பிய கமக்கார அமைப்புக்களுக்கும் இடையில் நில பங்கீட்டு பிரச்சனை நிலவிவந்துள்ளது.

இந்தப் பிர்ச்சினையை அன்றைய  வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ச.கனகரத்தினம் அவர்கள் விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுடன் இணைந்து ஓர் இணக்கப்பட்டிற்கு கொண்டு வந்துள்ளார்.

2009 ஆம் ஆண்டு இறுதிப்போரின் பின்னர் 2012 ஆம் ஆண்டு மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட போது சிவன் ஆலய நிர்வாகத்தினர் ஆலய வளாகத்திற்கு என மேலும் குளத்தின் காணிகளை அபகரித்துள்ளனர் 

இந்த விடயம் குறித்து குளத்திற்கு சொந்தமான விவசாயிகள் சம்மந்தப்பட்ட தரப்பினரிடம் முறையிட்டுள்ளார்கள். குளத்தின் காணியியினை அருகில் இருக்கும் ஏழு குடும்பங்கள் அபகரித்து வீடுகளை கட்டி விட்ட நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக முல்லைத்தீவு மாவட்டத்தில் ஏற்பட்ட வறட்சி காரணமாக இந்த குளத்தின் நீர் நிலையும் வற்றியுள்ளது.

இந்த குளத்தில் நீர் வற்றியதன் காரணத்தால் இந்த கிராமத்தினை சேர்ந்த மக்களின் கிணறுகளிலும் நீர் முற்றாக வற்றியுள்ளது.

மணற் குளத்தினை நம்பி வாழ்ந்த மக்கள் தங்களின் பொருளாதாரத்தினை கட்டி எழுப்பக்கூடிய வகையில் நன்நீர் மீன்பிடி தொழிலினை விருத்தி செய்யலாம் என்ற நோக்கில் குளத்தினை அபிவிருத்தி செய்து தருமாறு கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

ஆனால் குளத்தின் காணிகள் பல்வேறு தரப்பினரால் அபகரிக்கப்பட்ட நிலையில் கடந்த ஆண்டு 2017 ஆம் ஆண்டு பிரதேச அபிவிருத்தி குழுவிற்கு இந்த விடயம் தொடர்பில் கமக்கார அமைப்புக்களால் தெரிவிக்கப்பட்டும் முறைப்பாடு செய்யப்பட்டும் வந்துள்ளது.

இருந்தும் சிவன் கோவில் ஆலய நிர்வாகத்தின் விட்டுக் கொடுப்பின்மையும் கமக்கார அமைப்பின் விட்டுக்கொடுப்பின்மை காரணமாக இந்த காணியின் எல்லைப்பிரச்சனை தீர்க்கப்படாமல் இழுபட்டு வந்த நிலையில் மாவட்ட அபிவிருத்திக்குழுக்கூட்டதிற்கு கொண்டுசெல்லப்பட்டு அங்கும் எதுவித முடிவுகளும் எட்டப்பாடத நிலையில் இரு தரப்பினரையும் ஒரு இணக்கத்திற்கு கொண்டுவருவதற்கு புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பலவகையில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும் பலனளிக்காத நிலையே காணப்பட்டுள்ளது.

பல கூட்டங்கள் போட்டும் முடிவுகள் காணப்படாத நிலையில் இறுதியாக பிரதி அமைச்சர் காதர் மஸ்தான்  தலைமையில் 25.09.18 அன்று இறுதி முடிவு எட்டப்படுவதற்காக புதுக்குடியிருப்பு பிரதேச செயலக மண்டத்தில் கூட்டம் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் பிரதி அமைச்சர் காதர் மஸ்தான்,புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் ம.பிரதீபன்,முன்னாள் வன்னிமாவட்ட பாராளமன்ற உறுப்பினர் ச.கனகரத்தினம் பிரதேச சபை தவிசாளர் உப தவிசாளர் பிரதேச சபை உறுப்பினர்கள் கமக்கார அமைப்புக்கள் ஆலய நிர்வாகத்தினர் என பலர் கலந்துகொண்டுள்ளார்கள் இந்த கூட்டத்தின் போது ஆலயத்திற்கான காணியினை குறிப்பிட்ட அளவு அளந்து கொடுப்பதற்கு இருதரப்பும் இணக்கம் தெரிவித்துள்ளார்கள்.

இதன் படி ஆலயம் அமைந்துள்ள பகுதிக்கு காலை 11.30 மணிக்கு அனைவரும் சென்ற போது அங்கு இணக்கப்பாட்டிற்கு இணங்கிய காணி எல்லை போதாது என ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளார்கள்.

அதாவது ஆலயத்தின் தேர் இழுப்பதற்கு வீதியின் விஸ்தீரணம் தேவை என்பதை அவர்கள் வலிறுத்தி வந்த அதேவேளை கமக்கார அமைப்புக்கள் இணக்கப்பாட்டிற்கு எட்டப்பட்ட எல்லையினை விட மேலதிகமாக அதிகளவான மீற்றர் தூரத்தினை ஆலயத்திற்காக விட்டுக்கொடுத்தார்கள் அதுவும் போதாது என ஆலய நிர்வாக தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து பாரிய இழுபறிகளின் பின்னர் மாலை 4.00  நில அளவை திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொலீசார் கமநலசேவை திணைக்கள உத்தியோகத்தர்கள் மக்கள் முன்னிலையில் ஆலத்தின் தேவைக்கான காணியினை எல்லைப்படுத்தி தூண் போட்டு அடையாளப்படுத்தியுள்ளார்கள்.

வன்னி மாவட்ட பாராளுமன்றஉறுப்பினரும் புனர்வாழ்வு,மீள்குடியேற்றம் வடக்கு அபிவிருத்தி பிரதி அமைச்சருமான கெளரவ காதர் மஸ்தான் அவர்களின் இந்த முயற்சி காரணமாக இருதரப்பும் இணக்கத்திற்கு வந்து சமரசத்துடன் நீண்ட கால காணிப்பிரச்சனை ஒரு தீர்விற்கு  வந்துள்ளது.

இந்த மணற்குளம் மற்றும் சிவன் கோவிலுக்குரிய காணிக்கு  எல்லையிடப்பட்டதன் ஊடாக இவர்களுக்கிடையில் நிலவி வந்த பிரச்சனைகள் முற்றுப் பெற்றுள்ளதையிட்டு இரு தரப்பினரும் நன்றி தெரிவித்துள்ளார்கள்
சிவன் கோயில் விவகாரம் முப்பது வருட இழுபறியை காதர் மஸ்தான் தீர்த்து வைத்தார் சிவன் கோயில் விவகாரம் முப்பது வருட இழுபறியை காதர் மஸ்தான் தீர்த்து வைத்தார் Reviewed by Vanni Express News on 9/27/2018 12:35:00 PM Rating: 5