இந்தியாவிற்கு பறந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

மூன்று நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தியாவின் புதுடில்லிக்கு சென்றுள்ளார். 

புதுடில்லி விமான நிலையத்தில் வைத்து அவரை பாரதிய ஜனதா கட்சியின் சிரேஷ்ட தலைவர் சுப்ரமணியம் சுவாமி வரவேற்றுள்ளார். 

இந்திய பாரதிய ஜனதா கட்சியின் அழைப்பின் பேரில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தியா சென்றுள்ளார். 

இதேவேளை இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சபாநாயகர் கருஜயசூரிய உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு நேற்று இந்தியப் பிரதமர் மற்றும் இந்திய ஜனாதிபதியை சந்தித்துள்ளனர். 

அயலவருக்கு முதலிடம் என்ற கொள்கையில் இலங்கை இந்தியாவுக்கு விஷேடமானது மற்றும் தேவையானது என்று இந்திய ஜனாதிபதி இதன்போது கூறியுள்ளார்.
இந்தியாவிற்கு பறந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தியாவிற்கு பறந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ Reviewed by Vanni Express News on 9/11/2018 03:05:00 PM Rating: 5