haiiii

இலங்கையில் ஜனாதிபதி தேர்தலில் மகிந்தவின் கட்சியே வெற்றிபெறும் - EIU

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆதரவு கட்சியே இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத்தேர்தலில் வெற்றிபெறும் என எகனமிஸ்ட் சஞ்சிகை- Economist Intelligence Unit (EIU) -தெரிவித்துள்ளது .

எகனமிஸ்டின் இலங்கை குறித்த அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது

எகனமிஸ்ட் மேலும் தெரிவித்துள்ளதாவது

இலங்கையில் அடுத்த நாடாளுமன்ற தேர்தல் 2020 நடுப்பகுதியில் இடம்பெறவுள்ளது நாங்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆசனங்களை கைப்பற்றி அரசாங்கத்தை அமைக்கும் என நாங்கள் கருதுகின்றோம்.

இந்த வருடம் இடம்பெற்ற உள்ளுராட்சி தேர்தலில் கட்சி பெற்ற பெரும் வெற்றி கட்சிக்கான ஆதரவையும் தற்போதைய அரசாங்கத்திற்கு எதிரான மனோநிலை அதிகரித்து வருவதையும் புலப்படுத்தியுள்ளது .

ஆளும் கூட்டணிக்குள் காணப்படும் முறுகல்  நிலை மற்றும் திறமையற்ற நிர்வாகம் காரணமாக ஐக்கியதேசிய கட்சியோ அல்லது ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியோ மக்களின் நம்பிக்கையை மீளப்பெறமுடியாது.

இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி மீண்டும் தேர்தலில் போட்டியிடுவார்,19வது திருத்தம் காரணமாக முன்னாள் ஜனாதிபதியால் தேர்தலில் போட்டியிடமுடியாது எனினும் பிரதமர் பதவி உள்ளது.

மகிந்த ராஜபக்சவின் நெருங்கியசகா ஒருவரோ அல்லது உறவினரோ ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெறுவார்கள் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.

ராஜபக்ச தரப்பு மீண்டும் உத்வேகம் பெற்றுள்ளது , கடந்த தேர்தலில் சிறிய வித்தியாசத்திலேயே சிறிசேன வெற்றிபெற்றதை கருத்தில் கொள்ளும்போது வாக்காளர் ஆதரவில் சிறிய மாற்றம் ஏற்பட்டாலும் ராஜபக்ச தரப்பு வேட்பாளர் வெற்றிபெறக்கூடும்.

அரசியல் நிச்சயமற்ற தன்மை அதிகரித்து வரும் நிலையில் நாங்கள் புதிய அரசமைப்பு முயற்சிகள் கவனத்தை இழக்கும் என நாங்கள் கருதுகின்றோம்,2020 வரை ஆட்சியிலிருப்பதே அரசாங்கத்தின் நோக்கமாக காணப்படும் என்பதால் புதிய அரசமைப்பை உருவாக்கும் முயற்சிகள் கவனத்தை இழக்கலாம்.

தற்போதைய அரசாங்கத்தின் காலத்தில் அரசமைப்பு சீர்திருத்தங்கள் நிறைவேற சாத்தியமில்லை என நாங்கள் கருதுகின்றோம்.
இச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்
Name

V.E.N.Media News,17,video,6,அரசியல்,4808,இஸ்லாமிய சிந்தனை,429,உதவி,16,உள்நாட்டு செய்திகள்,11037,கட்டுரைகள்,1388,கவிதைகள்,67,சினிமா,319,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,148,வாழ்த்துக்கள்,59,விசேட செய்திகள்,3201,விளையாட்டு,727,வினோதம்,159,வெளிநாட்டு செய்திகள்,2074,வேலைவாய்ப்பு,10,ஜனாஸா அறிவித்தல்,29,
ltr
item
Vanni Express News: இலங்கையில் ஜனாதிபதி தேர்தலில் மகிந்தவின் கட்சியே வெற்றிபெறும் - EIU
இலங்கையில் ஜனாதிபதி தேர்தலில் மகிந்தவின் கட்சியே வெற்றிபெறும் - EIU
https://3.bp.blogspot.com/-t0SQFa0fiYg/W5v70gybYfI/AAAAAAABPJw/ntl0gzW52-8uFH4bJe-dYEuBpTG7Bd6rwCLcBGAs/s640/V.E.N.Media.jpg
https://3.bp.blogspot.com/-t0SQFa0fiYg/W5v70gybYfI/AAAAAAABPJw/ntl0gzW52-8uFH4bJe-dYEuBpTG7Bd6rwCLcBGAs/s72-c/V.E.N.Media.jpg
Vanni Express News
http://www.vanniexpressnews.com/2018/09/mahinda_14.html
http://www.vanniexpressnews.com/
http://www.vanniexpressnews.com/
http://www.vanniexpressnews.com/2018/09/mahinda_14.html
true
3693659101688311337
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS CONTENT IS PREMIUM Please share to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy