அமைச்சர்கள் மற்றும் அமைச்சுக்கள் வாகன இறக்குமதி செய்ய இன்று நள்ளிரவு முதல் தடை

அமைச்சர்கள் மற்றும் அமைச்சுக்கள் எதிர்வரும் ஓராண்டு காலத்துக்கு வௌிநாடுகளில் இருந்து வாகனங்களை இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட உள்ளதாக நிதியமைச்சு கூறியுள்ளது. 

அத்துடன் அரச துறை உத்தியோகத்தர்கள் 06 மாதங்களுக்கு வாகன இறக்குமதி செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இந்த தடை இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் என்று நிதியமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

இதேவேளை எதிர்வரும் ஒன்றரை ஆண்டு காலத்துக்கு அமைச்சர்களுக்கோ அல்லது அமைச்சுக்கோ புதிய வாகனங்கள் வௌிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதை முழுமையாக தடை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர கூறியுள்ளார். 

இந்த நாட்டு பொருளாதாரத்தை பலப்படுத்துவதற்காக எதிர்வரும் நாட்களில் மேலும் முக்கிய பல தீர்மானங்கள் எடுக்க வேண்டி ஏற்படும் என்றும் நிதியமைச்சர் கூறியுள்ளார். 

மாத்தறை றாகுல வித்தியாலயத்தில் நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.
அமைச்சர்கள் மற்றும் அமைச்சுக்கள் வாகன இறக்குமதி செய்ய இன்று நள்ளிரவு முதல் தடை அமைச்சர்கள் மற்றும் அமைச்சுக்கள் வாகன இறக்குமதி செய்ய இன்று நள்ளிரவு முதல் தடை Reviewed by Vanni Express News on 9/29/2018 04:31:00 PM Rating: 5