ஐ.நா சபையின் இலங்கைக்கான புதிய நிரந்தர பிரதிநிதி ஜனாதிபதியை சந்தித்தார்

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான புதிய நிரந்தர பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ள ஹெனா சிங்கர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்தார்.

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு அண்மையில் இடம்பெற்றது.  இதன்போது ஹெனா சிங்கர் தனது நற்சான்றுகளை ஜனாதிபதியிடம் சமர்ப்பித்தார்.

செல்வி. ஹெனா சிங்கர் ஐக்கிய நாடுகள் சர்வதேச குழந்தைகள் நிதியத்திற்காக 27 வருடங்கள் பணியாற்றியுள்ளார் என்பதுடன் தெற்காசியா உட்பட பல்வேறு பிராந்தியங்களில் மனிதாபிமான உதவிகள் பற்றிய சிரேஸ்ட முகாமைத்துவத்தில் 15 வருடத்திற்கும் மேற்பட்ட அனுபவத்தையும் கொண்டுள்ளார். 

அவர் சிரியா, நேபாளம், கசகஸ்தான், மற்றும் அசர்பைஜான் ஆகிய நாடுகளில் ஐக்கிய நாடுகள் சர்வதேச குழந்தைகள் நிதியத்திற்கான நாட்டின் பிரதிநிதியாகவும் பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஐ.நா சபையின் இலங்கைக்கான புதிய நிரந்தர பிரதிநிதி ஜனாதிபதியை சந்தித்தார் ஐ.நா சபையின் இலங்கைக்கான புதிய நிரந்தர பிரதிநிதி ஜனாதிபதியை சந்தித்தார் Reviewed by Vanni Express News on 9/08/2018 10:24:00 PM Rating: 5