இலங்கையின் முதலாவது திரவ வாயு மின் உற்பத்தி நிலையம்

இலங்கையின் முதலாவது திரவ வாயு மின் (LNG) உற்பத்தி நிலையம் அடுத்த மாதம் ஹம்பாந்தோட்டையில் ஆரம்பிக்கப்படவுள்ளது. 

சீனாவுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அமைவாக இலங்கை மின்சார சபை வேலைத் திட்டத்தை முன்னெடுக்கிறது. 

இதன் மூலம் 300 மெகாவோட்ஸ் மின்சாரம் தேசிய மின்சார வலைப்பின்னலுடன் ஒன்றிணைக்கப்படவுள்ளது. 

இந்த செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக ஆராய்வதற்கென அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய அண்மையில் இந்த இடத்திற்கு விஜயம் செய்தார். 
இலங்கையின் முதலாவது திரவ வாயு மின் உற்பத்தி நிலையம் இலங்கையின் முதலாவது திரவ வாயு மின் உற்பத்தி நிலையம் Reviewed by Vanni Express News on 9/29/2018 04:36:00 PM Rating: 5