எதிர்ப்பு பேரணியில் வழங்கப்பட்ட விஷம் கலந்த பால் - முஜிபுர் ரஹ்மான் மீது பழி சுமத்தும் - செஹான் சேமசிங்க

கூட்டு எதிர்க்கட்சியின் ´மக்கள் பலம் கொழும்புக்கு´ எதிர்ப்பு பேரணியின் போது கலந்து கொண்ட ஆதரவாளர்களுக்கு வழங்கப்பட்ட பால் பக்கட்டுக்களை அருந்தியவர்கள், பின்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவத்தின் பின்னால் இருப்பது ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் என்று பாராளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க கூறியுள்ளார். 

இன்று (07) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார். 

மக்கள் பலம் கொழும்புக்கு எதிர்ப்பு பேரணியில் கலந்துகொண்டவர்களுக்கு இனந்தெரியாத குழுவொன்றால் விசம் கலந்த பால் பக்கட்டுக்கள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். 

பேரணியில் கலந்து கொண்டு பசியுடன் இருக்கும் மக்களுக்கு இதுபோன்ற செயலொன்றை செய்ததை எதிர்ப்பதாகவும் அவர் கூறினார்.
எதிர்ப்பு பேரணியில் வழங்கப்பட்ட விஷம் கலந்த பால் - முஜிபுர் ரஹ்மான் மீது பழி சுமத்தும் - செஹான் சேமசிங்க எதிர்ப்பு பேரணியில் வழங்கப்பட்ட விஷம் கலந்த பால் - முஜிபுர் ரஹ்மான் மீது பழி சுமத்தும் - செஹான் சேமசிங்க Reviewed by Vanni Express News on 9/07/2018 10:11:00 PM Rating: 5