புதிய சட்டம் தலைக்கவசம் அணியாமல் வருவோருக்கு இனிமேல் பெட்ரோல் இல்லை

பங்களாதேஷில் சமீபத்தில் பேருந்து மோதி 2 மாணவர்கள் உயிரிழந்தனர். இதனை அடுத்து, சாலை வசதியை மேம்படுத்தக்கோரி, தலைநகர் டாக்கா மற்றும் பிற முக்கிய நகரங்களில் ஆயிரக்கணக்கான மாணவர்கள், பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பங்களாதேஷில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

இதனை அடுத்து, பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையில் நடைபெற்ற அந்நாட்டு அமைச்சரவை கூட்டத்தில் போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு கடுமையான தண்டனை அளிக்கும் வகையில் சட்டம் கொண்டு வர ஒப்புதல் அளிக்கப்பட்டது. 

இதன் ஒரு பகுதியாக, தலையில் தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டி வருவோருக்கு பெட்ரோல் விற்பனை செய்ய வேண்டாம் என்று பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

மோட்டார் சைக்கிளில் அதிகப்பட்சம் 2 பேர் மட்டுமே பயணிக்க வேண்டும். மோட்டார் சைக்கிள் ஓட்டுவோருக்கு பின்னால் உள்ள இருக்கையில் அமர்வோரும் தலையில் தலைக்கவசம் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும் எனவும் புதிய உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய சட்டம் தலைக்கவசம் அணியாமல் வருவோருக்கு இனிமேல் பெட்ரோல் இல்லை புதிய சட்டம் தலைக்கவசம் அணியாமல் வருவோருக்கு இனிமேல் பெட்ரோல் இல்லை Reviewed by Vanni Express News on 9/07/2018 11:40:00 PM Rating: 5