ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் கரப்பந்தராட்டப் போட்டி ஆரம்பம்

ஆசிய சாவல் கரப்பந்தராட்டப் போட்டித்தொடர் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் கொழும்பில் நேற்று ஆரம்பமானது.

கரப்பந்தாட்ட வரலாற்றில் புதியதோர் அத்தியாயத்தை ஆரம்பித்துவைக்கும் வகையில் இலங்கையில் இடம்பெறும் இந்த முதலாவது ஆசிய சவால் கிண்ணத்திற்கான ஆடவர் கரப்பந்து போட்டித்தொடரின் ஆரம்ப வைபம் நேற்று பிற்பகல் ஜனாதிபதி தலைமையில் கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற்றது.

ஆசிய கரப்பந்து சம்மேளனத்தின் வழிகாட்டலில் இலங்கை கரப்பந்து சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இடம்பெறும் இந்த போட்டித்தொடர் எதிர்வரும் 21ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. மலேசியா, ஹொங்கொங், சவுதி அரேபியா, இலங்கை, ஐக்கிய அரபு இராச்சியம், பங்களாதேஷ், ஈரான், மொங்கோலி ஆகிய நாடுகளைச் சேர்ந்த அணிகளில் இதில் விளையாடவுள்ளன.

ஜனாதிபதி இதன்போது போட்டித்தொடரை ஆரம்பித்து வைப்பதற்கான பிரகடனத்தை வெளியிட்டார்.

விளையாட்டுத்துறை அமைச்சர் பைசல் முஸ்தபாஇ கரப்பந்து சம்மேளனத்தின் தலைவர் அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டியஇ உப தலைவர் காஞ்சன ஜயரத்ன மற்றும் விளையாட்டுத் துறைசார்ந்த அதிதிகள் இந்த ஆரம்ப நிகழ்வில் பங்குபற்றினர்.
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் கரப்பந்தராட்டப் போட்டி ஆரம்பம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் கரப்பந்தராட்டப் போட்டி ஆரம்பம் Reviewed by Vanni Express News on 9/16/2018 11:34:00 PM Rating: 5