நியூயோர்க் நகரில் இருந்து இன்று அதிகாலை நாடு திரும்பிய ஜனாதிபதி

ஐக்கிய நாடுகளின் 73 வது பொதுச் சபை கூட்டத்தில் கலந்து கொள்ள நியூயோர்க் சென்றிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று அதிகாலை நாடு திரும்பினார். 

இம்முறை ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி, இலங்கையில் யுத்தத்தின் பின்னர் ஏற்பட்டுள்ள நல்லிணக்கம் தொடர்பில் அதன்கான செயற்பாடுகள் குறித்தும் தெளிவுப்படுத்தி இருந்தார். 

அத்துடன், ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் மற்றும் பொதுநலவாய நாடுகளின் பொதுச் செயலாளர் உள்ளிட்ட பல உலக நாடுகளின் தலைவர்களையும் ஜனாதிபதி சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நியூயோர்க் நகரில் இருந்து இன்று அதிகாலை நாடு திரும்பிய ஜனாதிபதி நியூயோர்க் நகரில் இருந்து இன்று அதிகாலை நாடு திரும்பிய ஜனாதிபதி Reviewed by Vanni Express News on 9/30/2018 09:37:00 AM Rating: 5