சிறுவர் பராமரிப்பு இல்லத்தைத் திறந்து வைத்த பிரதமர் ரணில்

நாட்டின் ஆரம்பக் கல்வியை படிப்படியாக ஒழுங்குபடுத்துவது குறித்து அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்தி வருவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

அரசாங்கத்தின் கொள்கைக்கு அமைய இதற்காக இரண்டாயிரம் சிறுவர் கல்வி நிறுவனங்களையும், சிறுவர் பராமரிப்பு நிலையங்களையும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

ஐந்து வயதில் பாடசாலைக்கு செல்ல ஆரம்பித்ததில் இருந்து வாலிப பருவத்தை அடையும் வரை சிறந்த சமூக ஒழுங்குமுறையொன்றை உருவாக்குவதற்குத் தேவையான சட்ட திட்டங்களையும் சமூக பின்புலத்தையும் உருவாக்குவது அரசாங்கத்தின் நோக்கமாகும் என்று பிரதமர் சுட்டிக்காட்டினார். 

இரத்தினபுரி மாவட்டத்தில் தாய்-தந்தையரின் அரவணைப்பை இழந்துள்ள தமிழ் சிறுவர்களுக்காக இறக்வானை 40ம் இலக்கத் தோட்டத்தில் அமைக்கப்பட்ட சிறுவர் பராமரிப்பு இல்லத்தைத் திறந்து வைத்ததன் பின்னர் அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார். 

எம்பிலிப்பிட்டிய ஸ்ரீ போதிராஜ மன்றத்தின் தலைவர் சங்கைக்குரிய ஓமல்பே சோபித்த தேரரின் வழிகாட்டலின் கீழ் இந்தச் சிறுவர் பராமரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. 
சிறுவர் பராமரிப்பு இல்லத்தைத் திறந்து வைத்த பிரதமர் ரணில் சிறுவர் பராமரிப்பு இல்லத்தைத் திறந்து வைத்த பிரதமர் ரணில் Reviewed by Vanni Express News on 9/17/2018 11:06:00 PM Rating: 5