இலங்கை சுகாதாரத் துறையை அமெரிக்காவுடன் ஒப்பிடும் அமைச்சர் ராஜித

தற்போது இந்த நாட்டு சுகாதாரத் துறையை ஒப்பீடு செய்வது ஐக்கிய அதெரிக்காவில் காணப்படுகின்ற நிலமையுடனேயே என்று சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறினார். 

இம்முறை யுனிசெப் அறிக்கையின்படி அமெரிக்காவில் தாய் மற்றும் குழந்தை இறப்பு விகிதத்துக்கு சமமான நிலமையே இலங்கையிலும் காணப்படுவதாக அமைச்சர் கூறியுள்ளார். 

அமெரிக்காவின் சில மாநிலங்களில் தாய் மற்றும் குழந்தை இறப்பு விகிதம் இலங்கையை விடவும் பின்தங்கிய நிலையில் இருப்பதாக அமைச்சர் மேலும் கூறினார். 

நாட்டின் சுகாதாரத் துறையை கட்டியெழுப்புவதற்கு பொருளாதாரம் செல்வாக்கு செலுத்துவதில்லை என்பதற்கு சிறந்த உதாரணம் இலங்கையே என்று அவர் கூறியுள்ளார். 

உலக சுகாதார தாபனத்தின் அறிக்கை படி, இலங்கையின் தற்போதைய சுகாதார சேவை, ஏழைகளுக்கு மிகவும் நெருக்கமான தரமான சேவையை வழங்கக் கூடியது என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக அமைச்சர ராஜித சேனாரத்ன கூறினார்.
இலங்கை சுகாதாரத் துறையை அமெரிக்காவுடன் ஒப்பிடும் அமைச்சர் ராஜித இலங்கை சுகாதாரத் துறையை அமெரிக்காவுடன் ஒப்பிடும் அமைச்சர் ராஜித Reviewed by Vanni Express News on 9/15/2018 10:55:00 PM Rating: 5