பொய் சாட்சியம் வழங்கிய காரணத்தால் ரவிக்கு எதிராக வழக்கு தாக்கல்

முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளதாக எமது செய்தியாளர் கூறினார். 

ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட பிணைமுறி மோசடி சம்பந்தமாக விசாரிப்பதற்கான ஆணைக்குழுவில் பொய் சாட்சியம் வழங்கியதற்கு எதிராகவே அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

ஆணைக்கழு முன்னிலையில் பொய் சாட்சியம் வழங்கிய காரணத்தால் அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று ஆணைக்குழுவின் அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளமை கூறத்தக்கது.
பொய் சாட்சியம் வழங்கிய காரணத்தால் ரவிக்கு எதிராக வழக்கு தாக்கல் பொய் சாட்சியம் வழங்கிய காரணத்தால் ரவிக்கு எதிராக வழக்கு தாக்கல் Reviewed by Vanni Express News on 9/14/2018 11:59:00 AM Rating: 5