haiiii

பாணின் விலை அதிகரித்தமை தொடர்பில் பேக்கரி உரிமையாளர்களுடன் அமைச்சர் ரிஷாட் அவசர சந்திப்பு

-ஊடகப்பிரிவு

கோதுமை மாவை ஆகக்கூடிய சில்லறை விலையான 87 ரூபாவுக்கு மேல் விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கு எதிராக சுற்றிவளைப்புக்களை மேற்கொண்டு உரிய சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபைக்கு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பணிப்புரை விடுத்துள்ளார்.

அதேவேளை, பேக்கரி உரிமையாளர் சங்கத்தை இன்று காலை (19) சந்தித்த அமைச்சர் ரிஷாட், கோதுமை மாவின் விலையுயர்வை பயன்படுத்திபாணின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளமை பாவனையாளரை பாதித்துள்ளதாகவும் எனவே, மீண்டும்பழையவிலையில் பாணைவிற்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.

அமைச்சரின் கோரிக்கையைசாதகமாக ஏற்றுக்கொண்ட பேக்கரி உரிமையாளர்கள், கோதுமை மாவின் விலையை மீண்டும் 05 ரூபாவினால் குறைத்துத் தரும் பட்சத்தில், உடனடியாக பாணைபழைய விலைக்கு விற்கநடவடிக்கை எடுப்பதாகவும்உறுதியளித்தனர்.

அத்துடன், கோதுமை மாவை பேக்கரி உரிமையாளர்கள் நேரடியாக இறக்குமதி செய்யும் வகையில், இறக்குமதித் தீர்வையை அரசுகுறைத்துத்தந்தால்கோதுமைமாவை இறக்குமதி செய்து,பாவனையாளர்களுக்கு இதை விட குறைந்த விலையில் தரமான பாணை வழங்க முடியுமெனவும் தெரிவித்தனர்.

2016/0714 வெளியிடப்பட்ட வர்த்தமானியின் இலக்கம் 1945/68 நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் சட்டத்திருத்த விதிமுறைக்கிணங்க கோதுமைமாவின் ஆகக்கூடிய சில்லறை விலை 87 ரூபாவாக அமையும் என குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், நுகர்வோர் பாதுகாப்பு சபையின் அனுமதியின்றி கோதுமை மா இறக்குமதியாளர்கள், தமக்கு விரும்பியபடி கோதுமைமாவின் விலையை அதிகரித்துள்ளமை சட்ட விரோதமானது எனவும்,சந்தையில் மாவின் சில்லறை விலையை87 ரூபாவுக்கு மேல் வர்த்தகர்கள் அதிகரித்து விற்றால்,அவர்களுக்கெதிராக நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை நாளை தொடக்கம் (20) சுற்றிவளைப்புக்களை மேற்கொண்டு சட்ட நடவடிக்கைகளைஎடுக்குமென, அதிகார சபையின் முக்கியஸ்தர் ஒருவர் எச்சரித்துள்ளார்.

பேக்கரிஉரிமையாளர் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜெயவர்த்தனஇது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில்,பேக்கரி உரிமையளர்களின் கோரிக்கையை,கோதுமை மா இறக்குமதியாளர்கள் உடன்நிறைவேற்றினால் அமைச்சரின் வேண்டுகோளை ஏற்று தாமும் அதே விலைக்கு பாணை விற்பனை செய்ய நடவடிக்கை எடுப்பதாகவும்தெரிவித்தார்.

மேலும், இன்று காலை அமைச்சர் ரிஷாட் பதியுதீனுடனான சந்திப்பில் தமது தொழிலில் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடியதுடன், இந்தச்சந்திப்பு ஆக்கபூர்வமாக இருந்தது எனவும் அவர்குறிப்பிட்டார்.
இச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்
Name

V.E.N.Media News,17,video,6,அரசியல்,4877,இஸ்லாமிய சிந்தனை,429,உதவி,15,உள்நாட்டு செய்திகள்,11151,கட்டுரைகள்,1394,கவிதைகள்,67,சினிமா,319,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,59,விசேட செய்திகள்,3251,விளையாட்டு,727,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2079,வேலைவாய்ப்பு,10,ஜனாஸா அறிவித்தல்,29,
ltr
item
Vanni Express News: பாணின் விலை அதிகரித்தமை தொடர்பில் பேக்கரி உரிமையாளர்களுடன் அமைச்சர் ரிஷாட் அவசர சந்திப்பு
பாணின் விலை அதிகரித்தமை தொடர்பில் பேக்கரி உரிமையாளர்களுடன் அமைச்சர் ரிஷாட் அவசர சந்திப்பு
https://2.bp.blogspot.com/-Ia2XmSM1Vrc/W6IsQzbK9AI/AAAAAAABPUo/lO7fy8jEFboPqlBYivACFTbaRE9xrpT7QCLcBGAs/s640/V.E.N.Media.jpg
https://2.bp.blogspot.com/-Ia2XmSM1Vrc/W6IsQzbK9AI/AAAAAAABPUo/lO7fy8jEFboPqlBYivACFTbaRE9xrpT7QCLcBGAs/s72-c/V.E.N.Media.jpg
Vanni Express News
http://www.vanniexpressnews.com/2018/09/rb_48.html
http://www.vanniexpressnews.com/
http://www.vanniexpressnews.com/
http://www.vanniexpressnews.com/2018/09/rb_48.html
true
3693659101688311337
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS CONTENT IS PREMIUM Please share to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy