சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு - பால்மா விலை குறைப்பு - கோதுமை மாவின் விலை ?

சமையல் எரிவாயு மற்றும் பால் மாவின் விலைகளை சீராக்கம் செய்வதற்கு வாழ்க்கைச் செலவு குழு பரிந்துரை செய்துள்ளது. 

அதன்படி 12.5 கிலோ நிறையுடைய சமையல் எரிவாயுவை 195 ரூபாவால் அதிகரிப்பதற்கும் பால் மாவின் விலையை 25 ரூபாவால் குறைப்பதற்கும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 

இன்று மாலை கூடிய வாழ்க்கைச் செலவு குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. 

இந்தக் கூட்டத்தில் கோதுமை மாவின் விலையை குறைப்பது சம்பந்தமாகவும், அவதானம் செலுத்தப்பட்டுள்ள போதிலும், அது தொடர்பில் இறுதித் தீர்மானம் எட்டப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு - பால்மா விலை குறைப்பு - கோதுமை மாவின் விலை ? சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு - பால்மா விலை குறைப்பு - கோதுமை மாவின் விலை ? Reviewed by Vanni Express News on 9/18/2018 11:35:00 PM Rating: 5