உணவு ஒவ்வாமையினால் 56 மாணவர்கள் வைத்தியசாலையில்

வட்டவலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டவலை டெம்பஸ்டோ தோட்ட பகுதியில் உணவு ஒவ்வாமையின் காரணமாக 56 பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

வட்டவலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டெம்பஸ்டோ தோட்ட கிரிஸ்தவ ஆலயத்தில் இடம்பேற்ற ஆலய உட்சவத்தின் போது வழங்கப்பட்ட அண்ணத்தானத்தை உட்கொண்டமையினால் 56 சிறுவர்கள் உணவு ஒவ்வாமையினால் வாந்தி மற்றும் வயிற்றோட்டம் காரணமாக வட்டவலை ஆதார வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டள்ளதாக வட்டவலை பொலிஸார் தெரிவித்தனர். 

இச் சம்பவம் நேற்று (05) இரவு 09 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

குறித்த 56 சிறுவர்களும் வட்டவலை பிரதேச வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக இருவர் நாவலபிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 

சம்பவம் தொடர்பில் உட்கொண்ட உணவினை பிரதேச சுகாதார பரிசோதகர் பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வட்டவலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 
உணவு ஒவ்வாமையினால் 56 மாணவர்கள் வைத்தியசாலையில் உணவு ஒவ்வாமையினால் 56 மாணவர்கள் வைத்தியசாலையில் Reviewed by Vanni Express News on 9/06/2018 04:03:00 PM Rating: 5