வடிகாலில் விழுந்து 4 வயதுடைய சிறுவன் பலி

அம்பாறை, பக்கி எல்ல கிராமத்தில் பாதுகாப்பற்ற வடிகால் ஒன்றில் விழுந்து 4 வயதுடைய சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். 

நீர்ப்பாசன திணைக்களத்தினால் நீரை எடுத்துச் செல்வதற்காக தோண்டப்பட்டிருந்த வடிகால் ஒன்றில் விழுந்தே குறித்த சிறுவன் உயிரிழந்துள்ளான். 

நேற்று (09) மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர். 

ஐந்து நாட்களுக்கு முன்னர் இந்த வடிகால் தோண்டப்பட்டுள்ளதுடன் அதனை சுற்றி எவ்வித பாதுகாப்பு வேலிகளும் போடப்படமையே இந்த விபத்து இடம்பெற காரணம் என பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர். 

மனுஹாச் ஏகநாயக எனும் 4 வயதுடைய சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.
வடிகாலில் விழுந்து 4 வயதுடைய சிறுவன் பலி வடிகாலில் விழுந்து 4 வயதுடைய சிறுவன் பலி Reviewed by Vanni Express News on 9/10/2018 05:06:00 PM Rating: 5