காய்ச்சல் காரணமாக உயிரிழந்த பாத்திமா அப்லா சோக சம்பவம்

-அப்துல்சலாம் யாசீம்

ஹொரவ்பத்தான பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 8 வயது சிறுமி காய்ச்சல் காரணமாக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டயைடுத்து இன்று (14) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்த சிறுமி ஹொரவ்பத்தான, றத்மலை பகுதியைச் சேர்ந்த இக்லாஸ் ராசானா என்பவரின் எட்டு வயது மகளான அப்லா எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

ரத்மலை முஸ்லிம் வித்தியாலயத்தில் இரண்டாம் தரத்தில் கல்வி பயிலும் மாணவியான இவர் நேற்றைய தினம் காய்ச்சல் காரணமாக பாடசாலையில் இருந்து 10 மணியளவில் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை பெற்றோர் தனியார் வைத்தியசாலை ஒன்றில் மருந்து எடுத்துள்ளார். அந்த மருந்துக்கு சுகம் கிடைக்காமையினால் இன்றைய தினம் மகாதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலைக்கு சென்றுள்ளனர்.

இதேவேளை அச்சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அம்புலன்ஸ் வண்டி மூலம் அனுப்பிவைக்கப்பட்டதாகவும் வைத்தியசாலை பேச்சாளரொருவர் தெரிவித்தார்.

அத்துடன் அச்சிறுமி திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டயைடுத்து உயிரிழந்துள்ளதாகவும் அவரது ஜனாஸா தற்பொழுது பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
காய்ச்சல் காரணமாக உயிரிழந்த பாத்திமா அப்லா சோக சம்பவம் காய்ச்சல் காரணமாக உயிரிழந்த பாத்திமா அப்லா சோக சம்பவம் Reviewed by Vanni Express News on 9/14/2018 10:18:00 PM Rating: 5