போலி விமர்சனங்களே வெற்றியை பறைசாற்றுகின்றது

ஜனபலய மக்கள் பேரணிக்கு எதிராக எழுந்துள்ள போலி விமர்சனங்களே அதன் வெற்றியை பறைசாட்டுவதாக கொழும்பு மாநகர சபை பொதுஜன பெரமுன உறுப்பினர் செனானி சமரநாயக்க குறிப்பிட்டார்.

கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

நல்லாட்சியை அரசாங்கத்தை ஆட்சி பீடத்திலிருந்து வெளியேற்றும் எமது முயற்சியின் முதல் படியே இந்த ஜனபலய போராட்டம்.

ஆளும் அரசாங்கத்தின் செயற்பாடுகளினால் கீழ் மட்டம் முதல் மேல் மட்ட வர்த்தகப் பிரிவினர் வரை அனைவரும் அதிருப்திக்குள்ளாகியுள்ளனர்.

இந்த நல்லாட்சி அரசாங்கத்தினர் நாட்டை பிளவுபடுத்தும் நோக்கில் இரகசியமாக சட்டமூலங்களை அறிமுகப்படுத்தி வருகின்றனர்.

நாட்டை பிளவடையச் செய்வது மாத்திரமின்றி தொடர்ந்து வரிகளை சுமத்தி மக்கள் மீதான சுமைகளையும் அதிகப்படுத்தி வருகின்றனர்.

ஜனபலய மக்கள் பேரணிக்காக கொழும்பை நோக்கி படையெடுத்த மக்கள் வெள்ளத்தைக் கண்டு அரசு அச்சமடைந்துள்ளது.அதன் வெளிப்பாடாகவே இன்று ஜனபலய மக்கள் பேரணிக்கு எதிராக விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

மதுபோதையில் ஓரிருவர் விழுந்து கிடந்ததை படம் பிடித்து சமூக வலைகளில் விமர்சிகின்றனர். லட்சக்கணக்காணவர்கள் திரண்ட ஒரு பேரணியில் ஓரிருவர் மதுபோதையில் தள்ளாடியதை போல படம் பிடித்து காட்டி இந்த பேரணியின் வெற்றியை திசை திருப்பும் முயற்சிக்கின்றனர். இவர்களின் இந்த சேறுபூசல்கள் தொடர்பில் மக்கள் மிகக் தெளிவாக உள்ளனர்  என அவர் குறிப்பிட்டார்.
போலி விமர்சனங்களே வெற்றியை பறைசாற்றுகின்றது போலி விமர்சனங்களே வெற்றியை பறைசாற்றுகின்றது Reviewed by Vanni Express News on 9/08/2018 05:12:00 PM Rating: 5