மீண்டும் ஶ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட ஞானசார தேரர்

சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட ஞானசார தேரர் மீண்டும் ஶ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக ஶ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையின் பணிப்பாளர் கூறியுள்ளார். 

சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ள ஞானசார தேரர் சத்திர சிகிச்சை ஒன்றுக்குகாக ஶ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். 

பின்னர் கடந்த ஆகஸ்ட் 30ம் திகதி அங்கிருந்து சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தமை கூறத்தக்கது. 

நீதிமன்றத்தை அவமதித்ததாக பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு கடுமையான உழைப்புடன் 06 வருடங்களில் அனுபவிக்கும் படியாக 19 வருட சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் ஶ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட ஞானசார தேரர் மீண்டும் ஶ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட ஞானசார தேரர் Reviewed by Vanni Express News on 9/06/2018 02:22:00 PM Rating: 5