விரைவில் மக்கள் சட்டத்தை கையில் எடுக்க நேரிடும் - பொதுபல சேனா

நாட்டின் சட்டத்தை பாதுகாக்க வேண்டிய காவற்துறை அதிகாரிகள் மேற்கொள்ளும் ஒரு சில செயற்பாடுகளால் மக்கள் எதிர்காலத்தில் சட்டத்தை கையில் எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுபல சேனா அமைப்பின தேசிய அமைப்பாளர் விதாரன்தெனிய நந்த தேரர் இதனை தெரிவித்துள்ளார்.

தேசிய இயக்கங்களில் செயற்பட்ட மற்றும் அதற்காக குரல் எழுப்பிய தலைவர்களை இலக்கு வைத்து சிறைபிடிக்கும் சூழ்ச்சிகள் இடம்பெற்று வந்துள்ளன.

நாட்டின் சட்டத்தை காவற்துறையினர் கையகப்படுத்துவார்களானால் விரைவில் மக்கள் சட்டத்தை கையில் எடுக்க நேரிடும் என பொதுபல சேனா அமைப்பின் தேசிய அமைப்பாளர் விதாரன்தெனிய நந்த தேரர் தெரிவித்துள்ளார்.
விரைவில் மக்கள் சட்டத்தை கையில் எடுக்க நேரிடும் - பொதுபல சேனா விரைவில் மக்கள் சட்டத்தை கையில் எடுக்க நேரிடும் - பொதுபல சேனா Reviewed by Vanni Express News on 9/14/2018 10:56:00 PM Rating: 5