ஞானசார தேரரை விடுவிக்குமாறு கோரி நாளை எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட பின்னர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் ஞானசார தேரரை விடுவிக்குமாறு தெரிவித்து இராணுவத்தினரின் உரிமைகளைப் பாதுகாக்கும் தேசிய செயலணி நாளை (10) எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை நடாத்த திட்டமிட்டுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டம் பொரல்லை நகரில் நடாத்தப்படவுள்ளதாக அச்செயலணியின் தலைவர் யு.டீ. வசந்த தெரிவித்துள்ளார்.

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் அண்மையில் ஞானசார தேரருக்கு 6 வருட கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது
ஞானசார தேரரை விடுவிக்குமாறு கோரி நாளை எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஞானசார தேரரை விடுவிக்குமாறு கோரி நாளை எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் Reviewed by Vanni Express News on 9/09/2018 10:36:00 PM Rating: 5