ஐக்கிய தேசிய கட்சி வலுவுடன் எதிர்காலத்தை நோக்கி பயணிக்கின்றது

ஐக்கிய தேசிய கட்சி ஒரு குடும்பத்திற்கு உரித்தான கட்சி அல்ல அந்த கட்சி ஜனநாயகத்தை முன்னிலைப்படுத்தி செயற்படும் ஒரு கட்சியாகும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். 

சிறிகொத்தவில் இன்று (06) நடைபெற்ற கட்சியின் 72 ஆவது வருட நிறைவு நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

நாட்டில் ஜனநாயகத்தை முன்னெடுக்கும் கட்சி ஐக்கிய தேசியக்கட்சியே என்று தெரிவித்த அவர் 72 ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடுவதையிட்டு நான் பெருமகிழ்ச்சியடைகின்றேன் என்று அவர் கூறினார். வரலாற்று முக்கியத்துவம் மிக்க இந்த கட்சிக்கு 7 பேர் தலைமை தாங்கியுள்ளனர். 

ஐக்கிய தேசிய கட்சி வலுவுடன் எதிர்காலத்தை நோக்கி பயணிக்கின்றது. இது ஜனநாயகக் கட்சியாகும். இதுவே இக்கட்சி ஏனைய கட்சியிலும் பார்க்க வித்தியாசமாகும். 1994 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஐக்கிய தேசியக் கட்சிக்கு அரச தலைவர் ஒருவர் இருக்கவில்லை. 

ஐக்கிய தேசிய கட்சி உள்ளூராட்சி மன்ற தேர்தலில் பின்னடைவை கண்டது என்று சிலர் நினைக்கின்றனர். எம்மால் 10 ஆண்டுகளுக்கு அரசாங்கத்தை முன்னெடுக்க முடியும். வலுவுடன் இந்த பயணத்தை ஆரம்பிக்கவேண்டும். 

கூட்டு எதிர்க்கட்சி தமது பிரச்சினைகளுக்கு தீர்வாக கொழும்பில் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர். கொழும்பை முடக்கப்போவதாக கூறினர். நேற்று பின்னடைவைக் கண்ட வேலைத்திட்டத்தையே நாம் கொழும்பில் கண்டோம். 

உலக நாடுகளில் மக்கள் சக்தி முன்னெடுக்கப்படுவது ஜனநாயகத்திற்கு எதிரான பிரச்சினைகள் காணப்படும் போதே. ஊடகத்தை பார்க்கும் போது நாம் கடைப்பிடிக்கும் ஜனநாயகம் தெளிவாக வெளிப்படுகின்றது. எமது தலைவரினால் ஆணைக்குழுக்களை அமைக்க முடிந்தது. 

ஜனநாயக நிறுவனங்களை கட்டியெழுப்ப முடிந்தது. இந்த நாட்டின் எதிர்காலம் ஐக்கிய தேசியக்கட்சியே ஆகும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். 
ஐக்கிய தேசிய கட்சி வலுவுடன் எதிர்காலத்தை நோக்கி பயணிக்கின்றது ஐக்கிய தேசிய கட்சி வலுவுடன் எதிர்காலத்தை நோக்கி பயணிக்கின்றது Reviewed by Vanni Express News on 9/06/2018 10:12:00 PM Rating: 5