பொலிஸாரை மோதிவிட்டு தப்பிச் சென்ற வான் - இரண்டு பொலிஸார் வைத்தியசாலையில்

ரத்தினபுரி பிரதேசத்தில் சந்தேகத்துக்கிற்கிடமான வான் ஒன்று பொலிஸாரை மோதிவிட்டு தப்பிச் சென்றதில் இரண்டு பொலிஸார் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவம் இன்றைய தினம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பலாங்கொடை-ரத்தினபுரி பிரதான வீதியின் எல்லேபொல பிரதேசத்தில் போக்குவரத்துப் பொலிஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த வீதி வழியாக வந்த வான் ஒன்றை நிறுத்துமாறு பொலிஸார் சைகை காட்டியுள்ளனர். வானில் இருந்தவர்கள் பொலிஸாரை மோதிக் காயப்படுத்தி விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

இதன்போது இரண்டு பொலிஸார் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரியவந்துள்ளது.

இதேவேளை, தப்பிச் சென்ற வான் மற்றும் அதில் பயணித்தவர்கள் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பொலிஸாரை மோதிவிட்டு தப்பிச் சென்ற வான் - இரண்டு பொலிஸார் வைத்தியசாலையில் பொலிஸாரை மோதிவிட்டு தப்பிச் சென்ற வான் - இரண்டு பொலிஸார் வைத்தியசாலையில் Reviewed by Vanni Express News on 9/15/2018 11:43:00 PM Rating: 5