போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீரின் விலை அதிகரிப்பு ?

போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீரின் குறைந்தபட்ச சில்லறை விலைகளை நிர்ணயித்து அதி விஷேட வர்த்தமானி ஒன்றை பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை வெளியிட்டுள்ளது. 

அதனடிப்படையில் 350 - 499 மில்லி லீற்றர் நீர் போத்தல்கள் 26 ரூபாவாகவும், 500 - 749 மில்லி லீற்றர் நீர் போத்தல்கள் 35 ரூபாவாகவும், 1 - 1.49 லீற்றர் நீர் போத்தல்கள் 50 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

மேலும் 1.5 - 4.99 லீற்றர் நீர் போத்தல்கள் 70 ரூபாவாகவும் 5 - 6.99 லீற்றர் நீர் போத்தல்கள் 150 ரூபாவாகவும் 7 லீற்றர் நீர் போத்தல்கள் 170 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீரின் விலை அதிகரிப்பு ? போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீரின் விலை அதிகரிப்பு ? Reviewed by Vanni Express News on 9/30/2018 05:33:00 PM Rating: 5