இடியுடன் கூடிய மழையுடன் பலத்த காற்றும் வீசக்கூடும்

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் குறிப்பாக பிற்பகலில் அல்லது மாலையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. 

குறிப்பாக வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் காணப்படும் மழையுடனான நிலைமை அடுத்த சில நாட்களுக்கும் தொடருமென எதிர்பார்க்கப்படுகின்றது. 

மத்திய, ஊவா, சப்ரகமுவ, வடமத்திய மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. 

மேல், தென் மற்றும் வடமேல் கரையோரப் பிரதேசங்களில் பல இடங்களில் காலை வேளையிலும் மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. 

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள். 
இடியுடன் கூடிய மழையுடன் பலத்த காற்றும் வீசக்கூடும் இடியுடன் கூடிய மழையுடன் பலத்த காற்றும் வீசக்கூடும் Reviewed by Vanni Express News on 9/29/2018 04:25:00 PM Rating: 5