கடும் மழை காரணமாக அக்குறனை நகரம் வௌ்ளத்தில் மூழ்கியது

தொடர்ச்சியான அடை மழை காரணமாக கண்டியை அண்மித்த அக்குறனை நகரம் முழுமையாக வௌ்ளத்தில் மூழ்கியுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் கூறியுள்ளது. 

நேற்று ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக அக்குறனை நகரில் உள்ள வர்த்தக நிலையங்கள் உட்பட வீடுகளும் வௌ்ளத்தில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இதேவேளை நேற்று பெய்த கடும் மழையின் காரணமாக நாவலபிட்டி நகரமும் வௌ்ளத்தில் மூழ்கியிருந்ததாக எமது செய்தியாளர் கூறுகின்றார்.
கடும் மழை காரணமாக அக்குறனை நகரம் வௌ்ளத்தில் மூழ்கியது கடும் மழை காரணமாக அக்குறனை நகரம் வௌ்ளத்தில் மூழ்கியது Reviewed by Vanni Express News on 9/30/2018 09:26:00 AM Rating: 5