காதல் விவகாரம் - தன்னைத்தானே கடத்திக் கொண்ட 17 வயது யுவதி

அம்பலாந்தோட்டை வலவ்வத்த பிரதேசத்தில் வீடொன்றில் நுழைந்த குழுவினரால் கடத்தப்பட்ட 17 வயது யுவதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

தங்காலை குற்ற விசாரணை பிரிவின் அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையின் போது குறித்த யுவதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

கடத்தப்பட்ட குறித்த யுவதி மற்றும் சந்தேகநபரான இளைஞர் இன்று மதியம் 5 மணியளவில் திஸ்ஸமஹாராம வீரவில பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டனர்.

அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் குறித்த யுவதியின் விருப்பத்தின் படி திட்டமிடப்பட்டு குறித்த கடத்தல் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

யுவதி தனது தாயின் கைப்பேசியில் அவரது காதலனுக்கு அழைப்பினை ஏற்படுத்திய பின்னரே குறித்த சந்தேகநபர்கள் வீட்டினுள் நுழைந்துள்ளதாக காவற்துறை விசாரணையின் போது தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக அம்பலாந்தோட்டை காவற்துறையினர் தெரிவித்தனர்.
காதல் விவகாரம் - தன்னைத்தானே கடத்திக் கொண்ட 17 வயது யுவதி காதல் விவகாரம் - தன்னைத்தானே கடத்திக் கொண்ட 17 வயது யுவதி Reviewed by Vanni Express News on 10/03/2018 10:42:00 PM Rating: 5