யாழில் இருந்து முழங்காவில் நோக்கி சென்ற தனியார் பேருந்து விபத்து பலர் காயம்

பூநகரி, சங்குப்பிட்டி பாலத்திற்கு தனியார் பேருந்து ஒன்று அருகில் விபத்துக்கு உள்ளானதில் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று மதியம் யாழில் இருந்து முழங்காவில் நோக்கி சென்ற தனியார் பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. 

மாடு ஒன்று பாதையின் குறுக்கே சென்றதாலேயே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இதன் போது பேருந்து தடம் புரண்டதில் பலர் காயமடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். 

இவ்வாறு காயமடைந்தார்கள் அம்புலன்ஸ் வண்டி மூலம் பூநகரி மற்றும் யாழ் போதான வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

யாழில் இருந்து முழங்காவில் நோக்கி சென்ற தனியார் பேருந்து விபத்து பலர் காயம் யாழில் இருந்து முழங்காவில் நோக்கி சென்ற தனியார் பேருந்து விபத்து பலர் காயம் Reviewed by Vanni Express News on 10/02/2018 11:27:00 PM Rating: 5