மாடு ஒன்றுடன் மோதிய மோட்டார் சைக்கிளில் - சம்மாந்துறையை சேர்ந்த இஸ்மாயில் பலி

அம்பாறை - கல்முனை பிரதான வீதியின் வலதாபிடிய பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் ஒருவர் மாடு ஒன்றுடன் மோதி உயிரிழந்துள்ளார்.

இன்று (08) காலை 5.30 மணியளவில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

குறித்த மோட்டார் சைக்கிள் மாடு ஒன்றுடன் மோதி அருகில் இருந்த கால்வாயினுள் விழுந்து விபத்துக்குள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

சம்மாந்துறை பகுதியை சேர்ந்த இஸ்மாயில் எனும் 37 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மாடு ஒன்றுடன் மோதிய மோட்டார் சைக்கிளில் - சம்மாந்துறையை சேர்ந்த இஸ்மாயில் பலி மாடு ஒன்றுடன் மோதிய மோட்டார் சைக்கிளில் - சம்மாந்துறையை சேர்ந்த இஸ்மாயில் பலி Reviewed by Vanni Express News on 10/08/2018 05:03:00 PM Rating: 5