கடுகதி புகையிரதத்துடன் மோதிய காட்டு யானை

மட்டக்களப்பு-கொழும்பு புகையிரத மார்க்கத்தில் வெலிக்கந்தை பிரதேசத்தில் புகையிரதத்துடன் மோதி காட்டு யானை ஒன்று படுகாயமடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றனார். 

நேற்று இரவு 09.45 மணியளவில், மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த கடுகதி புகையிரதத்துடன் வெலிக்கந்தை, மொனரதென்ன பிரதேசத்தில் வைத்து இந்த காட்டு யானை மோதியுள்ளது. 

இந்த விபத்து காரணமாக புகையிரதத்திற்கோ அல்லது புகையிரத பாதைக்கோ எவ்வித பாதிப்புக்களும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விபத்தில் படுகாயமடைந்துள்ள காட்டு யானைக்கு சிகிச்சை அளிப்பதற்காக கிரிதலே வனஜீவராசிகள் திணைக்கள மிருக வைத்தியர்கள் குழுவொன்று வருகை தந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றனார்.
கடுகதி புகையிரதத்துடன் மோதிய காட்டு யானை கடுகதி புகையிரதத்துடன் மோதிய காட்டு யானை Reviewed by Vanni Express News on 10/10/2018 11:28:00 AM Rating: 5