மோட்டார் சைக்கிள் ஒன்றும் வேன் ஒன்றும் மோதி விபத்து - மாணவன் பலி

எஹெலியகொட, இடம்கொட பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 16 வயதுடைய மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளான். 

மோட்டார் சைக்கிள் ஒன்றும் வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

விபத்தில் பலத்த காயமடைந்த மாணவன் எஹெலியகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளான். 

விபத்து தொடர்பில் வேனின் ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிள் ஒன்றும் வேன் ஒன்றும் மோதி விபத்து - மாணவன் பலி மோட்டார் சைக்கிள் ஒன்றும் வேன் ஒன்றும் மோதி விபத்து - மாணவன் பலி Reviewed by Vanni Express News on 10/14/2018 05:48:00 PM Rating: 5