புத்தளம் - அனுராதபுரம் பகுதியில் டிபெண்டர் வாகனம் கவிழ்ந்து கோர விபத்து - ஒருவர் பலி - 5 பேர் காயம்

புத்தளம் - அனுராதபுரம் வீதியின் 18ம் தூண் பகுதியில் விமான படைக்குச் சொந்தமான டிபெண்டர் வாகனமொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் விமானப்படை வீரரொருவர் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் 5 பேர் காயமடைந்துள்ளனர்.

நேற்று பிற்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவற்துறை ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இந்த விபத்தில் உயிரிழந்தவர் அனுராதபுரம் தலாவ பிரதேசத்தை ​சேர்ந்த 28 வயதுடைய விமானப்படை வீரர் என தெரிவிக்கப்படுகிறது.

காயமடைந்த மற்றைய விமானப்படை வீரர்களில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக புத்தளம் ஆதார மருத்துவமனையில் இருந்து கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

டிபெண்டர் வாகனம் அதிக வேகத்தில் பயணித்ததால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
புத்தளம் - அனுராதபுரம் பகுதியில் டிபெண்டர் வாகனம் கவிழ்ந்து கோர விபத்து - ஒருவர் பலி - 5 பேர் காயம் புத்தளம் - அனுராதபுரம் பகுதியில் டிபெண்டர் வாகனம் கவிழ்ந்து கோர விபத்து - ஒருவர் பலி - 5 பேர் காயம் Reviewed by Vanni Express News on 10/16/2018 05:18:00 PM Rating: 5