திருகோணமலை பிரதேசத்தில் கோர விபத்து 19 வயது இளைஞன் பலி

திருகோணமலை மூதூர் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பட்டித்தடல் பிரதேசத்தில் நேற்று (16) இரவு இடம்பெற்ற விபத்தில் 19 வயது இளைஞர் உயிரிழந்ததாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர். 

மூதூர், மணல்சேனை, மல்லிகைத்தீவை சேர்ந்த குமார் குருபன் தனுஷ்கரன் எனும் 19 வயதுடைய இளைஞன் ஒருவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

நேற்று இரவு வீதியில் படுத்திருந்த எருமை மாடு ஒன்றுடன் மோதியதில் குறித்த இளைஞனும் எருமை மாடும் ஸ்தலத்தில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. 

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மூதூர் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

சம்பவம் தொடர்பில் மூதூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

திருகோணமலை பிரதேசத்தில் கோர விபத்து 19 வயது இளைஞன் பலி திருகோணமலை பிரதேசத்தில் கோர விபத்து 19 வயது இளைஞன் பலி Reviewed by Vanni Express News on 10/17/2018 11:43:00 PM Rating: 5