வவுனியா புளியங்குளம் பகுதியில் கோர விபத்து - ஒருவர் பலி - ஐவர் காயம்

வவுனியா, புளியங்குளம் பகுதியில் இன்று (18) காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர். 

நெல் அறுவடை செய்யும் இயந்திரம் ஒன்றை ஏற்றிச்சென்ற டிரக்டர் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

விபத்தில் லொறியில் மற்றும் டிரக்டரில் பயணித்தவர்கள் காயமடைந்துள்ளதுடன் லொறியில் பயணித்த மரியதாஸ் மோஹனதாஸ் என்பவர் உயிரிழந்துள்ளார். 

விபத்தில் காயமடைந்தவர்கள் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. 

சம்பவம் தொடர்பில் புளியங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வவுனியா புளியங்குளம் பகுதியில் கோர விபத்து - ஒருவர் பலி - ஐவர் காயம் வவுனியா புளியங்குளம் பகுதியில் கோர விபத்து - ஒருவர் பலி - ஐவர் காயம் Reviewed by Vanni Express News on 10/18/2018 10:55:00 PM Rating: 5